Friday, November 22, 2019

introduction


என் இனிய இந்திய வாழ் மக்களே, வணக்கம்!

நான் சகதிவேல் மற்றும் எனது நண்பர் சையது அவர்களும் உங்களுக்கான முதலீட்டாளரை உங்களிடம் அழைத்து வந்துள்ளோம். அது வேறு யாருமல்ல நீங்களும் நானும் மற்றும் நம்மை போலுள்ள அனைத்து உடன்பிற்ப்புகளும் தான்.

அது எப்படி என்பதை உங்களுக்கு விளக்குகிறேன்.
அதற்கு முன் எங்களைப் பற்றியும் எங்களுக்கு என்ன நடந்தது என்பதையும் விளக்குகிறேன். தங்களால் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்.

தெளிவான தொழில் திட்டத்துடன் முதலீட்டுக்காக கடுமையா முயர்சித்தோம் ஆனால் இறுதியில் தனியார் கடன் பெற்றோம். கடுமையாக பல வருடங்கள் உழைத்து நல்ல நிலைமைக்கு தொழிலை கொண்டு வந்தோம். ஆனால் இறுதியில் பல மடங்கு விலை மதிப்பில் இருந்த எங்களது தொழிலை கடன் கொடுத்தவர்களுக்கு கொடுத்தோம். சாதாரண குடும்பத்தில் வந்த எங்களால் சரியான நேரத்தில் அரசு வங்கியின் உதவியையோ அரசின் உதவியையோ எங்களால் பெறவே முடியவில்லை. சாதாரண மக்களுக்கு எங்கள் வலி உண்ர கூடியதே.

சற்று நாட்களுக்கு முன் செய்திதாளில் மொய்விருந்து என்பதை பற்றி கேள்விப்பட்டோம், இதை போல் நமக்கும் கிடைத்து;இருந்தாள் நன்றாக;இருக்கும் என்று ஏங்கினோம். இதைபோல நமக்கு கிடைத்து இருந்தாள் நம் நிறுவனத்தை இழந்து இருக்க தேவையில்லை என்று உணர்ந்தோம்.

நாங்கள் எங்களால் இயன்ற அளவுக்கு மற்றவர்கள் தொழிலுக்கும் மற்றும் அவசியத் தேவைகளுக்கும் உதவினாலும் அது போதுமானதாக இல்லை.மற்றும் இதைப்போன்ற தேவைகளுக்காக மக்கள் மீண்டும் மீண்டும் கந்து வட்டி மற்றும் அதிக வட்டி கடன்களில் சிக்கி உயிரை மாய்த்து கொள்வதையும் கண்டு மனம் வருந்தினோம். அதர்காண தீர்வே இது.